
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் இந்தியன் துரைவேல் வரவேற்புரை ஆற்றினார். மாநில இணை அமைப்பாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் சிவ செந்தமிழ் அரசு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் பங்கேற்றனர்.
பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில இணை அமைப்பாளர் டி. எஸ். ஷங்கர் கூட்டுறவு பிரிவின் வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்கால பணிகள் மற்றும் சட்ட உதவி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக —
கூட்டுறவு பிரிவை மாநிலத்தில் முதன்மை பிரிவாக உயர்த்தும் உறுதி,
மாவட்ட அளவில் கூட்டுறவு அலுவலகங்களைத் தொடங்குதல்,
மத்திய அரசின் கூட்டுறவு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக பயன்பெறச் செய்தல்,
வரவிருக்கும் தேர்தல்களில் ஏ-கிளாஸ் உறுப்பினர்களை அதிகரித்து வெற்றி பெற நடவடிக்கை எடுப்பது,
ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 பொறுப்பாளர்களை நியமித்து பிரிவை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மேலும், ரேஷன் கடைகளில் கரி கல்யாணத் திட்டத்தின் கீழ் பிரதமர் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகை அமைப்பது பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் அவர்களின் தந்தையார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம் பாஜக கூட்டுறவு பிரிவை மாநில அளவில் முக்கிய பிரிவாக மாற்றும் உறுதியுடன் நிர்வாகிகள் செயல்பட தீர்மானித்தனர்.
