
பென்னாகரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ், பென்னாகரம், பி அக்ரஹாரம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய், 14 லட்சம் மதிப்பீட்டிலும், ஜாமியா மஸ்ஜித் அடக்கஸ்தானம் சுற்றுச்சுவர் அமைக்க ரூபாய் 5.50 லட்சம் மதிப்பீட்டிலும்,சுண்ணாம்புக்கார தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய், 4 லட்சம் மதிப்பீட்டிலும், ராஜுவ் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூபாய், 5.50 லட்சம் மதிப்பீட்டிலும், வேலம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம் கட்ட ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டிலும், முதுகம்பட்டி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய்,.4 லட்சம் மதிப்பீட்டிலும், ஜங்கமயனூர் கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம் கட்ட ரூபாய், 9 லட்சம் மதிப்பீட்டிலும், சொரக்காபட்டியில் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய், 6 லட்சம் மதிப்பீட்டிலும், ஏரியூர் பஸ் நிலையம் நுழைவாயில் அமைக்க ரூபாய், 7 லட்சம் மதிப்பீட்டிலும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பென்னாகரம் பா.ம.க.., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பென்னாகரம் பஸ் நிலையம் நுழைவாயில், பாப்பாரப்பட்டி ,மாதே அள்ளி அருகே நடைப்பெற்று வரும் தாணியக்கல உள்ளிட்ட பணியையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் செல்வகுமார் ,மாவட்ட துணை தலைவர்கள் பெரியசாமி, சென்ராயன் , மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் தமிழரசன் முருகன், வினோத், ராசா உலகநாதன், சந்திரன்,சாமிநாதன், அம்மாசி,ஒப்பந்ததாரர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
