
கோவை ஜி என் மில்ஸ் அருகே உள்ள அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டாம்பூச்சி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட்டது. இதில் மாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம், பாடல் மற்றும் சிறிய உரைகள் வழங்கினர். மேலும் மாணவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு காட்சி பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
கோவை ஜி என் மில்ஸ் அருகே உள்ள அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல் கே ஜி மற்றும் யூ கே ஜி மாணவர்களுக்காக பட்டாம்பூச்சி தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர் என் ஆர் டி பிரேம்குமார், இணை செயலர் டாக்டர் பி இ ஆர் பிரேம்சந்த், முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம், பாடல் மற்றும் சிறிய உரைகள் வழங்கினர். மேலும் மாணவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு காட்சி பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
மாணவர்கள் முகத்தில் பட்டாம்பூச்சி வடிவம் வரைந்து பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றியும் எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
மற்ற பள்ளிகளில் இருந்தும் குழந்தைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவியாக அமைந்தது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிகழ்ச்சியை பாராட்டினர்.
