500க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் கருணாகரன் தலைமையில் இணைந்தார்கள்,

துரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் அவரின் மகனும் திமுக பகுதி செயலாளரும்மான கருணாகரன் திமுகவில் இருந்து விலகி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தான் ஆதரவாளர்கள் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் உடன் மதுரை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும்மான ராஜன் செல்லப்பா அவர்கள் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர், ராஜன் செல்லப்பா அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டை அணிவித்து தன் வாழ்த்துக்கள் தெரிவித்தார், இந்நிகழ்வில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன், அதிமுக தொகுதி, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்