நாட்றம்பள்ளி ஏரிக்குடி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு மழையை பொருட்படுத்தாமல் குறைப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடிய குழந்தைகள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஏரி கொடி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் விஎச்பி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் பள்ளி குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்து கொண்டு மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்து கொண்டு நடனமாடி கொண்டு ஏரி கொடி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை சென்றனர் . அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இதில் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்த அனைத்து குழந்தைகளுக்கும் நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமி சமாஹிதானந்தர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாட்றம்பள்ளி 14வது வார்டு கவுன்சிலர் குரு சேர்ப்பது கொண்டு சிறப்பித்தார் மேலும் இதில் ஏராளமான குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்