
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.
