பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் இன்று காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி , பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ,சென்னை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி,மாவட்ட நிர்வாக பதிவாளர் வளர்மதி,மாவட்ட தணிக்கை பதிவாளர் கனகராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் , பென்னாகரம் சார்பதிவாளர் குமார், உதவியாளர் காந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன் ,பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் செந்தில் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.