
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை மண்டல மாணவர் அணி சார்பில் கேக் வெட்டி கொண்டாட பட்டது. இந்த விழாவினை, மதிமுக
கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், தலைமை தாங்கி, கேக் வெட்டி வைகோவின் பிறந்தநாளைக் கொண்டாடினார். தொடர்ந்து, மதிமுக கழக, உயர் நிலைக்குழு உறுப்பினர் ஆர் ஆர் மோகன்குமார் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த
நிகழ்வுக்கு மதிமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் இள. கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் ம. இராஜீவ் குமார், தா. கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் கணபதி செல்வராஜ், பி.என்.இராஜேந்திரன், குகன் மில் செந்தில்குமார், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அ.சேதுபதி, கழக சட்டத்துறைச் செயலாளர் சூரி.நந்தகோபால், மாவட்ட துணைச் செயலாளர்கள் பயனீர் தியாகு, சு.தூயமணி, வ.இயேசுதாஸ், அக்ரோ கிருஷ்ணசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் மார்க்கெட் செல்வம், வி.கே.எம்.ஷாஜகான் , பகுதிக் கழகச் செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளிங்கிரி, முருகேசன் கோவை , எல்.லூயிஸ், மணிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
