
கடந்த 2020ம் ஆண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை,, தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளாக மாற்றி, எதிர்க்கட்சி எம்பிக்கள் யாரும் இல்லாத நாடாளுமன்றத்தில், அவற்றை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து, அன்றைய தினம் கருப்பு நாளாக கடைபிடித்து அனுசரிக்க வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது இந்த முடிவின்படி, அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, மத்தியஅரசை கன்டித்து, வரும் அக்டோபர் 22ம் தேதி, கருப்பு கொடியேந்தி கன்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மண்டலம் ஹோப் காலேஜ், பகுதியில், கருப்பு நாள், கருப்புக் கொடி ஏந்தி ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விராத போக்கை கண்டித்து மத்திய தொழிற்சங்க ங்கள் சார்பாக நடத்த பட உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று துண்டறிக்கை வழங்க பட்டது

. இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்டோ சங்கமான ஏஐடியூசி மாவட்ட தலைவர் சி ஏ வேலுச்சாமி, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் ஏஐடியுசி கே சி மூர்த்தி, ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
