
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணிக்கு அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்து, எய்ட்ஸ் நோய் பரவும் விதம், அதனைத் தடுக்கும் முறைகள் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்தில் பாகுபாடின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு பேசினார். பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, அகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தைப் படைப்போம்”
”விழிப்புணர்வே சிறந்த மருந்து”
”நோயாளிகளை நேசிப்போம், நோயை ஒழிப்போம்”போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு முழக்கங்களையும் எழுப்பினர்.முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற இந்தப் பேரணி, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்தப் பேரணியின் போது மாணவர்களின் பாதுகாப்பிற்காக நாகரசம்பட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
