ஒகேனக்கல் வனத்துறை சார்பில் காட்டுத் தீ மற்றும் யானை நடமாட்டத்தைஉடனடியாக தெரிவிக்கவனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு.

கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்கவும் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மேற்பார்வையில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பில் ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஒகேனக்கல் வனச்சரக எல்லைக்குட்பட்ட கிராமமான அரண்மனை பள்ளம் ஊட்டமலை மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வனப்பகுதியில் ஏற்படும் தீ தடுப்பு மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினருக்கு தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் கிராம மக்களிடம் காட்டு தீ ஏற்படும் விதங்களான வனப் பகுதியில் செல்லும்பொழுது வனப்பகுதிக்குள் புகை பிடிக்கக் கூடாது, வனப்பகுதியில் மது அருந்தக்கூடாது, பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பாட்டில்களை வனப்பகுதியில் போடக்கூடாது, வனப் பகுதிகளில் உள்ள கோயில்களில் தீபம் ,சூடம் பற்ற வைக்கும் போது ஏற்படும் தீயை தவிர்க்க வேண்டும், வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ப்பதை தவிர்க்க வேண்டும், வனப் பகுதி ஓரங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தைப் பற்றி விழிப்புணர்வும் மற்றும் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களில் யானைகள் நடமாட்டம் இருந்தாலும் யானைகள் அச்சுறுத்தல் இருந்தாலோ உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள்

ஒத்துழைப்பு வழங்க வேண்டும் யானைகள் நடமாடும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் அந்தப் பகுதியில் உள்ளது என கேள்விப்பட்டால் வெளியில் செல்வதை தவிர்க்கவும் இரவில் வெளியே செல்லும்போது கை விளக்குகள் அல்லது ஒளி தரும் விளக்குகளை எடுத்துச் செல்லவும் யானை விரும்பாத பயிர்களை பயிர் செய்யவும் யானைகள் தண்ணீரின் வாசனையையும் நுகரும் என்பதால் தண்ணீரை வசிக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் சேமிக்கவும் யானைகள் விரும்பும் உணவுகளான குறிப்பாக பலாப்பழம் புளி விளாம்பழம் வாழைப்பழம் தேங்காய் சர்க்கரை பாகு வெல்லம் நொதித்த திரவங்கள் போன்றவைகளை வீட்டினுள் வைப்பதை தவிர்க்கவும் மற்றும் யானைகள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் செல்வதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள அரண்மனை பள்ளம் ஊட்டமலை ஒகேனக்கல் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் வனவிலங்குகள் நடமாட்டத்தை உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமென தகவல் தெரிவித்தனர் . மேலும் அரண்மனை பள்ளம் ஊட்டும் மலை ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது என்பதை விளக்கும் விதமாகவும் காட்டுத் தீ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலவச எண்களான மாநில அளவிலான காட்டுத் தீ தடுப்பு அலைபேசி எண். 1800 4254 409 மாவட்ட அளவிலான அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 1800 4254 586 ஆகிய எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வில் ஒகேனக்கல் வனவர் மகேஸ்வரி
வனக்கப்பளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா ,அரவிந்த் குமார் ,மோகனா, அனிதா மற்றும் வனத்துறை பணியாளர்கள் தெருக்கூத்து கலைஞர்கள் ஒகேனக்கல் ஊட்டமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.