மக்களின் தேவைகள் அறிந்து ஆட்சி செய்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்! வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய ஒற்றுமை இயக்கம், மற்றும் கோவை முற்போக்கு இயக்கங்கள் அறிவிப்பு..

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று இந்திய ஒற்றுமை இயக்கம் மற்றும் கோவை முற்போக்கு இயக்கங்கள் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது பேசிய பேராசிரியர் காமராஜ் கூறியதாவது.. தமிழ்நாடு 17வது சட்டமன்றத் தேர்தலை, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடத்த, உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரையும் நடந்த சட்டமன்ற தேர்தலை போல் இந்த தேர்தலும் ஒன்று என கருதி விட முடியாது, காரணம் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ்-ம் கையாண்ட பிற்போக்குவாத கோட்பாடுகளும்,, மதவெறி அரசியலும், அதன் விளைவாக கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில் சமூக பொருளாதார அரசியல் அமைப்பிலும், நாடு கடுமையான பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பலமும், தனித்தன்மையும், அதன் பன்முக தன்மையே, இதனை அழித்தொழிக்க ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, என்ற ஒற்றை கோட்பாட்டு அரசியலை, பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்து வருகின்றது. எனவே பிற்போக்கு, பிளவாத, சித்தாந்த கோட்பாடுகளுக்கு எதிராக, நிற்கும் ஜனநாயக சக்திகள், கட்சிகள், மற்றும் தமிழ்நாட்டின் வெகுஜன மக்களுக்கான, தேர்தல் இது எனவும், இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவை முற்போக்கு இயக்கங்கள் மற்றும் இந்திய ஒற்றுமை இயக்கம் பரப்புரை மேற்கொள்ளதுடன், திமுகவிற்காக வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்தார்.