
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் தலைப்பில், அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை கோவை அமிர்தா பல்கலைக்கழகம் அருகே உள்ள, ஹார்மனி சம்மிட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
இதில், நாடு முழுவதிலும் இருந்து முன்னணி கல்வி ஆலோசகர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் வாயிலாக, உருவெடுத்து வரும் கல்வி வாய்ப்புகள், சர்வதேச கல்வி கூட்டாண்மைகள் மற்றும் உயர்கல்வித் துறையின் மாற்றமடைந்து வரும் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஒரு மேடையாக அமைந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்லிட்டோ நூன்ஸ் குத்துவிளக்கேற்றி வைத்து, மாநாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்வியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது.. சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களும் உலகளாவிய கல்வி சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார். தொடர்ந்து பேசிய
ஃப்யூச்சர் கேர் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநரான மனோஜ் மனயத்தோடி கூறியதாவது.. மாணவர்கள் தரமான உலகளாவிய கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க கல்வி நிறுவனங்களும் கல்வி ஆலோசகர்களும் இடையிலான திட்டமிட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை தெளிவாக கூறினார். இந்த நிகழ்ச்சியில்
சூரத்தைச் சேர்ந்த பி.பி. சவானி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஸ்நேஹ் சவானி,
ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முரளி கிருஷ்ணா, டாக்டர் சஹீஷ் மொய்தீன் மற்றும் லிம்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
