
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு மீட்பு பணித்துறை இயக்குனர் உத்தரவின்படியும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா அவர்களது மேற்பார்வையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தீயைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல் தீயணைப்பு மீட்பு நிலைய பொறுப்பு அலுவலர் முனுசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் ஊட்டமலை, ஒகேனக்கல், நல்லாம்பட்டி , மஞ்சாரப்பட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு தீயைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது இந்த வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு தீ பற்றிய விழிப்புணர்வு கற்பிக்கப்பட்டு பின்பு 20 கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தீ பற்றிய விழிப்புணர்வு வகுப்பு சான்று வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் தீயணைப்பு மீட்பு துறை பணியாளர்கள் முனுசாமி அசோக் குமார் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை பணியாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
