காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் இணையதள தொடக்க விழா நடைப் பெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது

இந்நிகழ்வில் வடக்கு மண்டல செயலாளர் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவரும் வரவேர்த்தார்

பின்பு சங்கத்தின் செயல்பாடுகள் ,
மாவட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளிலும் கலந்துரையாடினர்

இதற்கு சிறப்பு அழைப்பாளராக நிறுவனர் கூடலிங்கம் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்

பின்பு மாநில பொதுச் செயலாளர் வைகுண்ட மணி கிளைகள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் மற்றும் சங்கத்தின் இணையதள தொடக்க விழாவும் நடைபெற்றது

இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம் (சிவன் ராஜ்) ,செங்கல்பட்டு (லூக்காஸ் ),
வேலூர்(ரவிந்திரன், வெங்கடேசன்),
திருப்பத்தூர் (முத்து)
திருப்பூர் (கமலஹாசன்),
தென்காசி ( ராஜாமணி, சிவா),
திருநெல்வேலி,
தர்மபுரி (சந்தோஷ், பூவரசன்)என அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முத்து அனைவருக்கும் நன்றியுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது