
மதுரை ரயில் நிலையம் பின்புறம் மேற்கு நுழைவாயில் அருகே தக்சின் ரயில்வேஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் DREU- CITU சார்பில் ஆண்டுதோறும் 2% பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட பொறியாளர் சரவணன் தலைமை வகித்தார் மத்திய உதவி தலைவர் திருமலை ஐயப்பன் துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோட்டத் தலைவர் ராஜு கோட்ட செயலாளர் சிவக்குமார் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1990ல் ரயில்வே துறையில் 16.5 லட்சமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கையை வருடா வருடம் பணி ஓய்வில் செல்வோர் பதவிகளை நிரப்பாமல் சரண்டர் செய்து தற்போது 12.29 லட்சமாக குறைத்து இருப்பது, பதவிகள் சரண்டர் செய்வதினால் CRC பதவி உயர்வு பறிபோகும் அனைத்து பிரிவுகளிலும் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்தவும் ரயில்வேயில் உள்ள உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்பிடவும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
