இந்தியாவின் காற்றாலை ஆற்றல் துறைக்கான சிறப்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி

மற்றும் மாநாடு விண்டர்ஜி இந்தியா 2025 எனும் தலைப்பில் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.இந்தியா காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் உலகளவில் முன்னேற்றம் கண்டு வரும்நிலையில், இந்த நிகழ்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் எதிர்காலத்தை வடிவமைக்கும், இணைக்கும் மற்றும் இணைந்து செயல்படும் அபூர்வ வாய்ப்புகளை வழங்குகிறது.

விண்டர்ஜி இந்தியா 2025 எனும் தலைப்பில் உலகளாவிய கொள்கை அமைப்பாளர்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தீர்வுகள் வழங்குநர்கள், தொழில்துறை முன்னோடிகள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைக்கும் முக்கியமான வணிக தளமாக அமைய உள்ளது 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றது. மேலும் 15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற காற்றாலை ஆற்றல் முன்னோடிகள் கொண்ட பவிலியன்கள் இந்த நிகழ்வின் மதிப்பை மேலும் உயர்த்தும்.இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மத்திய அமைச்சரான பிரலாத் ஜோஷி மற்றும் மத்திய இராஜ்ய அமைச்சர் ஸ்ரீபாத் யேஷோ நாயக் ஆகியோர் நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்

.இதில், 350-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சியுடன் இணைந்து, அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் உயர்நிலை பேனல் விவாதங்கள் மற்றும் வட்டமேசை கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது மேலும் 2030-க்குள் 100 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல் இலக்கை அடைய அரசாங்க கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து உயர்மட்ட குழு விவாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.