
இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய, சி டூ இசட் மற்றும் இ க்யூ மேக் ப்ரோ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் குப்தா கூறியதாவது.. கோவையில் வரும் 11ம் தேதி மற்றும் 12,ம் தேதி என இரு நாட்கள், கொடிசியா வளாகத்தில் சோலார் குறித்த மாபெரும் இக்கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது எனவும், இம்மாநாட்டிற்க்கு இந்தியன் சோலார் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதன் நோக்கமே, வணிகம், தொழில் மற்றும் வீட்டு பயனாளர்களுக்கான முதலீடு இல்லாத சோலார் சிஸ்டங்களை உருவாக்க வேண்டும் எனவும், இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, முழுமையான உதவிகளை வழங்கி வருகின்றது ஆனால் இன்றளவும் அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை இதனை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

வரும் 11ம் தேதி, இக்கண்காட்சியை
கோவை மாநகராட்சியின் மேயர் ரங்கநாகி திறந்து வைக்க உள்ளதாகவும், இதில் சிறப்பு விருந்தினராக தமிழக, போக்குவரத்து மற்றும் மின்சாரம் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறியவர்.. இக்கண்காட்சியின் மூலமாக,
இந்தியாவில் உள்ள, முன்னணி சோலார் நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் நேரடியாக அவர்களது
சந்திப்பை உருவாக்க முடியும் எனவும், இக்கண்காட்சியில் சோலார் மேற்கூரை அமைக்கும் நிறுவனங்களுக்கு 200 சதவிகித கேஷ் பேக் வழங்க உள்ளதாகவும் கூறினார். சோலார் ஒளி முலமாக, இயங்கும் மின்சார வாகனங்கள், இறக்குமதி எரிபொருள் குறைப்புகள், மற்றும் சுத்தமான ஆற்றல் மூலம் மக்களுக்கு தேவையான தேவைகளை அடைய உதவுவதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
