
கோவை மாவட்டம் தடாகம் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மைய கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது. இம்மையத்தை முன்னாள் திமுக மின்சார துறை அமைச்சரும், கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, கூறியதாவது..
நீண்ட நாட்களாகவே கிராம புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்து வந்தது. அதற்காகவே இந்த பகுதியை தேர்வு செய்து வைத்திருந்தேன் தற்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது என்றார். இப்புதிய ஊரக மையத்தில் புறநோயாளிகள், மருத்துவரின் ஆலோசனை பெற, ஓராண்டு கட்டணமாக, வெறும் 30 ரூபாய் மட்டும் செலுத்தி, ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம் இது இப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றார். மேலும் இம்மையத்தில் இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் உப்பின் அளவு கன்டறிதல், இரத்தத்தில் சர்க்கரை அளவு கன்டறிதல், மார்பு பகுதி எக்ஸ்ரே, இசிஜி, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய அதற்கு தேவையான மருத்துவ கருவிகளும் அமைய பெற்றுள்ளது என தெரிவித்தார்

இங்கு வருகின்ற நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு இலவசமாக வழங்க படும் இதனை, இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, மற்றும் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
