
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராபுரி கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 15.10.2024 அன்று முழுவதும் பெய்த கனமழைக்கு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குட்டை குளங்கள் நீரால் நிரம்பின. இந்நிலையில் இந்திராபுரி கிராமத்திற்குள் மழை நீர் தேங்கியது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். உடனடியாக ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் அவர்களை தொடர்பு கொண்டு கிராமத்தின் நிலைமை குறித்து தெரிவித்தனர். துரித நடவடிக்கையாக ஜே.சி.பி. இயந்திர உதவியுடன் கிராமத்தில் தேங்கிய மழைநீரை சுமார் 5 அடி ஆழம் கால்வாய் அமைத்து மழைநீரை வடித்து கொடுத்தார். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
