உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து உடனடியாக மணிக்குள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவிட்டார் பின்பு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் வேண்டும் என்று ஒருத்தர் மனு கொடுத்தார் மனுவின் மீது விசாரணை நடத்தி உடனடியாக மாவட்ட ஆட்சியர் வழங்க நடவடிக்கை எடுத்தார் இதனால் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பெற்றவர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார் பொதுமக்களிடம் பெரும் மனுக்கள் 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களை கொடுத்து பயன்பெற்று வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி. கோட்டாட்சியர் திரு வரதராஜன். வட்டாட்சியர் நவநீதன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா நகராட்சி ஆணையாளர் சாந்தி நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி .கோபி. மாவட்ட ஆட்சியர் கூறுகையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை இந்த நிகழ்ச்சியில் கொடுத்து பயனடையுமாறும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார் மனுக்கள் கொடுத்தா அனைத்து மக்களும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தனர்