உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது

உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு,கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கிவைத்ததோடு,விழிப்புணர்வு பேரணியையும் துவக்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

இந்நிகழ்ச்சியில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிரந்தர மற்றும் தற்காலிக குடும்ப நல முறைகள் பற்றியும் மக்கள்தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும். தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதிய பிறப்பு இடைவெளி முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறு குடும்ப நெறி. திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப தகமுறைகள்.முதல் குழந்தைக்கும்.
இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி ஒரு பெண் கருவற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் தாய் சேய் நலத்தை பாதுகாத்தல்,பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல்,பெண் சிசுக் கொலையை தடுத்தல்,இளம் வயது திருமணத்தை தடுத்தல்.இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல்,மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல் சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் எண்ணை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். குடும்பநலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11.ஆம் நான் மக்கள் தொ 500 கோடி அடைந்ததை நினைவு கூர்ந்து மக்கள்தொகை பெருக்கம் அடையும் ஆபத்தினை உணர்ந்து விழிப்புணர்வு கொண்டு,மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூவை மாதத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஜீலை 2025 நிலவரப்படி உலக மக்கள் தொகை 823 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 145 கோடியாகவும் தமிழ்நாடு மக்கள் தொகை
8.15 கோடியாகவும் மற்றும் மாவட்ட மக்கன் தொகை 29.9 லட்சமாகவும் உள்ளது.2024 நிலவரப்படி 11.2 பிறப்பு விகிதமாகவும் 4.3 இறப்பு விகிதமாகவும்.சிசு இறப்பு விகிதமாகவும், இலட்சத்திற்கு 418.8 மகப்பேறு தாய்மார்களின் பிறப்பு விகிதமாகவும் உள்ளது.

நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவதிலும் இந்திய அளவில் கேரளாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இதே நிலையைத் தொடர்ந்து கடைபிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை என்ற இலக்கினை அடைய வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு, குழத்தை பிறப்பில் ஆண்-பெண் விகிதம் 916 என்பதை உயர்த்த பெண் குழந்தை பிறப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பாலின வேறுபாடு களைதல் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகியவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
ஆண்கள் 20 வயதிற்கு பிறகும். பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு குழத்தைகள் என்ற அளவில் குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி நிலவ வாய்ப்பு ஏற்படுகிறது வாழ்க்கைத் தரம் உயர இதுவே வழிவகுக்கும் நல் கல்வியறிவினை பெற்று வளமான தாயால்தான் சிறந்த சேயை பெற்றெடுக்க முடியும் என்பதை நினைவில் நிறுத்தி தாய் சேய் நலம் குழத்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறந்த கல்வியையும், வேலைவாய்ப்பு வாழ்க்கை தரத்தையும் பெற சிறு குடும்ப நெறி ஏற்பது ஒன்றுதான் சிறந்த வழியாகும்.
சரியான வயதில் திருமணம் மற்றும் கர்ப்பம் தரித்தல், இரு குழந்தைகளின் பிறப்புகளுக்கு இடையே போதிய இடைவெளியின் அவசியம், அதற்கான தற்காலிக குடும்பநல முறைகளின் பயன்பாடுகள் குறித்தும், திருமணம் மற்றும் இளம் வயதில் கர்ப்பம் தரித்தலால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இயலும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்திகழ்ச்சியில் இணை இயக்குநர். மருத்துவம் மரு.மணிமேகலை, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.நடராஜன், நிலைய மருத்துவர் மரு.கவிதா,மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் மரு.பாலகுமாரன், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சுகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ரோட்டரி சங்க நிருவாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.