ஏரியூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்
ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.
திமுக மதிமுக காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கிழக்கு முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான
தர்மச்செல்வன் தலைமையில் நடைபெற்றது இதில் ஏரியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துசாமி பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர் சரவணன் துணை செயலாளர்கள் சம்பத்குமார் சின்னு துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.( படம் விளக்கம் )மத்திய அரசை கண்டித்து ஏரியூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் நடைபெற்றது.)