
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து இன்று பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை மனுக்களாக பெற ஒகேனக்கல் பெரியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஏழு நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் பணியட்டை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் சங்கர் ராஜ், ஊரக வளர்ச்சி இயக்குனர் தணிக்கை வேடியப்பன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா மற்றும் சண்முகம் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் ,லோகநாதன் , வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
