கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் பல்வேறு இசைத்துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கபட்டு படும் வளுவூரார் விருதுகள் இந்த ஆண்டு 4 நபர்களுக்கு வழங்கபட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அசத்தியவளுவூரார் க்ளாசிகல் பரதநாட்டிய ஆர்ட்ஸ் சென்டர் அமைப்பு

கடந்த 1980ம் ஆண்டு முதல், சென்னையில் நாட்டியத்துறை,
இசைத்துறை,
நாடகத்துறை,
இசை நாட்டிய கலைகளை ஊக்குவிக்கும் சபாக்களுக்கு மற்றும் சமூக ஆர்வலர்கள், கலை ஆர்வலர்களுக்கு ஆண்டு தோறும் வளுவூரார் வாழ்நாள் சாதனையாளர் விருது எனும் விருதுகள் வழங்கபட்டு வருகின்றது. இதே போல, கோவையிலும் கடந்த 4 ஆண்டுகளாக, பல்வேறு இசைத்துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கபட்டு வருகின்றது. இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, வளுவூரார் கலை விழா
எனும் தலைப்பில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாருதி கான சபா அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை வளுவூரார் க்ளாசிகல் பரதநாட்டிய ஆர்ட்ஸ் சென்டர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பு கடந்த 2000 ஆண்டில் கோவையில் துவங்க பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான
வழுவூரார் விருதுகளை,
கலைமாமணி ஸ்ரீ கலா பரத்,
மற்றும், கலா சங்க அமைப்பாளரும், மருத்துவரும் நாட்டியமணியாகிய கீதா உபாத்யாயா ஆகிய இருவருக்கு வழங்கபட்டது.
இதனையடுத்து வழுவூர் சாம்ராஜ் வாழ்நாள் சாதனையாளர் நினைவு விருது,
கலைமாமணி குரு கோவை அமுதா தண்டபாணி, மற்றும்
மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை மற்றும் மயூர நாட்டியாஞ்சலி, தலைவர் பரணிதரன் ஆகியோருக்கு வழங்கபட்டது.
விழாவின் ஒரு பகுதியாக வழுவூரார் ராமையா பிள்ளை இயற்றிய தெய்வீக ஆடற்கலை எனும் இரண்டாவது பதிப்பு புத்தகம் விழா மேடையில் வெளியிடப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழா நிகழ்ச்சிக்கு, உறுதுணையாக
கலா சங்கம், ஷட்டர்பிரிக் நிறுவனம் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில், வழுவூர் நாட்டிய பள்ளியின் பெற்றோர்கள், பெருமளவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சிகள், வழூவூர் நாட்டிய பள்ளியின் மாணவ மாணவியர்களின் சிறப்பு நடனம், இயற்றப்பட்டதுடன், இலங்கையை சேர்ந்த தனுகா ஆர்யவர்ஷா, மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீ கலா பரத் ஆகியோரது நடன நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைந்தது மேலும் மும்பை, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு, வரும் கலா சங்கம் என்ற அமைப்பு கோவையிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாக, புதிய புதிய கலைஞர்களின் திறமைகளை வெளிகொண்டு வந்து கொண்டு உள்ளனர். இதன் இயக்குனராக சாய்ராம் விஸ்வநாதன் பொறுப்பேற்று இதனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..