
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
கள்ளக்குறிச்சி சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட
ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,
கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்
அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில், அறிஞர் அண்ணா
பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட தலைமை
இடங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் மூலமாக நடத்திட
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றையதினம்
மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, இன்றையதினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகத்திலிருந்து அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி துவங்கி வைக்கப்பட்டது.
17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும்,
பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 10
கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் ஆகிய 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும்
பெண்களுக்கு அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து துவங்கி
கச்சிராப்பாளையம் போகும் சாலை வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகம் வரை நடைபெற்றது. நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு
முதற்பரிசாக ரூ.5,000/- (தலா 4 நபர்கள்), இரண்டாம் பரிசாக ரூ.3,000/- (தலா 4 நபர்கள்),
மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ( தலா 4 நபர்கள்) மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10
இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000/- வீதம் 28 நபர்களுக்கும் பரிசுத்தொகை
வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரா.சுரேஷ்குமார் மற்றும் மாணவ,
மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
