
மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக அண்ணா நகரில் கண்ணீர் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) உலகளவில் மக்களிடம் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும், பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் திருப்பதில்லை எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட இந்திய மக்களின் 3% முதல் 5% வரை மக்களுக்கு குளுக்கோமா நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வருந்தத்தக்க விஷயம் யாதெனில் இதில் 50% மக்கள் மட்டுமே கண் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை (High Myopia), சர்க்கரை நோய், கண்ணில் காயம் தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர், மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது, ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக குளுக்கோமா வாரம் மார்ச் 8 முதல் 14 வரை உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் அனைவரும் இணைந்து செயல்பட்டு இந்நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைய வேண்டும், கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.
குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். Trabeculectomy மற்றும் (MIGS) ஆகியன நவீன அறுவை சிகிச்சை முறைகள் ஆகும்
குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு 14 வரை (ஒரு மாதம்) எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோய்க்கான இலவசமான கண் பரிசோதனை வழங்கப்படும் மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு கட்டணத்தில் 10% சலுகைகள் வழங்கப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தி ஐ ஃபவுண்டேசன் கண் மருத்துவமனை அனைத்து ஊர்களிலும் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகிறது.
இந்தப் பேரணிக்கு மதுரை இந்திய மருத்துவ சங்கம் உறுப்பினர்கள் டாக்டர்.மகாலிங்கம், டாக்டர்.மீனாம்பாள். டாக்டர் அழகு வெங்கடேஷ், டாக்டர். அமானுல்லா, டாக்டர் ஆனந்தி, அவர்கள் தலைமை தாங்கினார் தலைமை மருத்துவர் டாக்டர் விசாலாட்சி அவர்கள் கண்ணீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா காலேஜ் ஆஃப் ஆப்டோமெட்ரி சிஎஸ்ஐ நர்சிங் காலேஜ் மற்றும் ஐ பவுண்டேஷன் ஊழியர்கள் கலந்து கொண்டனர் பொது மேலாளர் திரு லோகநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மக்கள் தொடர்பு அதிகாரி மேலாளர் திரு. விஜயகுமார் மற்றும் மக்கள் தொடர்பு குழுவினர் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். இறுதியில் கிளை மேலாளர் திரு. சுகுமார் நன்றியுரை வழங்கினார்.
