
ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கித் திட்டத்தின் மூலம் 25 லட்சம் மி.லி. தாய்ப்பால் சேகரிப்பு என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்காகப் பாடுபட்ட கொடையாளர் தாய்கள் மற்றும் “நெக்டர் பீஸ்” தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் விழா கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம், ராஜஸ்தான் நிவாஸில் நடைபெற்றது..
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி தலைவர் தருண் குமார் ரான்கா மற்றும் செயலாளர் பாயல் சோர்டியா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
சிறப்பு விருந்தினர்களாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் உடற்பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல் பயிற்சியாளர் டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்..
நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக வுமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்,எஸ்.என்.ஆர் அண்ட் .சன்ஸ் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன்,ராஜஸ்தான் சங்கம் தலைவர் சந்தோஷ் குமார் முந்த்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்…
விழாவில் தாய்ப்பால் கொடை வழங்கிய தாய்மார்கள் மற்றும் நெக்டர் பீஸ் சேவையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது
நெக்டர் ஆஃப் லைஃப்” திட்டத்தின் தலைவர் ராகேஷ் ரான்கா, இணைத் தலைவர் அர்ச்சனா குமார், மற்றும் சமூகச் சேவை இயக்குநர் ராபின் பாபெல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட இயக்குநர் சம்பத் குமார், உதவி ஆளுநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆளுநரின் குழுப் பிரதிநிதி அருள் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…
