கோவையில், டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை, இந்திய அனிமேஷன் திரைப்பட நிபுணர் சுரேஷ் ஏரியாட் இணைந்து அறிமுகம் செய்து வைத்தார்.

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை கோவையில் துவக்கியது.
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை “லெட்ஸ் டாக் இன் கோவை” என நடத்தியது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, எல்.எம்.டபிள்யு. லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்ட் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு, டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் டீன் வைத்தியநாதன் ராமசுவாமி, கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து
‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.