
கோவை சித்தாபுதூர் பகுதியில் முரளிதரன் என்பவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் அறிமுகமான நிலையில் முரளிதரன் சேர்ந்து தொழில் செய்து வந்தார் பின்னர் ரவிக்குமார் செயலில் அதிரப்பத்தி அடைந்த முரளிதரன் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து பைசல் செய்து விட்டார்.பின்னர் திமுகவை சேர்ந்த ரவிக்குமார் முரளிதரன் வீட்டிற்கு சென்று முரளிதரன் மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தை திட்டியும் வீட்டின் கேட்டை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்று ரவிக்குமார் வெளியே வந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து நேற்று திமுகவை சேர்ந்த ரவிக்குமார் முரளிதரன் அலுவலகத்திற்கு சென்று அங்கிருக்க கூடிய பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டுள்ளார்.இது குறித்து முரளிதரன் காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ரவிக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் சிகப்பு நிற காரில் வழக்கறிஞர் என்ற அடையாளத்திலும் முன்பக்கத்தில் திமுக கட்சி கொடியின் கட்டப்பட்ட கார்கள் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது என் மீது கார் மோதுவது போல வந்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டி சென்றுள்ளார்.
தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் முரளிதரன் கோவை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
நேற்று ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த போது காவல்துறையினர் அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சிணர் என்பதால் காவல்துறையினர் திமுகவினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
