கோவையில் புதிய, நவீன வசதிகளுடன் கூடிய வேக்யூம் பம்ப் அசெம்ப்ளி லைன் தொடக்கத்தின் மூலம் வேக்யூம் தொழில்நுட்ப துறையில் எல்ஜி முன்னேற்றம்

உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கோவையில் புதிதாக வேக்யூம் பம்ப் அசெம்ப்ளி லைனை தொடங்கியுள்ளது.

இந்த புதிய உற்பத்தி வசதி, வேக்யூம் பம்ப் துறையில் எல்ஜி மேற்கொள்ளும் புதிய அத்தியாயத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்து, உற்பத்தித் திறன், தர முன்னணி நிலை மற்றும் உலகளாவிய போட்டித் திறன் ஆகியவற்றிற்கான அதன் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த அசெம்ப்ளி லைன், இத்தாலி நாட்டை சேர்ந்த டி.வி.பி. வேக்யூம் டெக்னாலஜி நிறுவனத்துடன் எல்ஜி நிறுவனம் மேற்கொண்ட பல ஆண்டுகளாக தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், டி.வி.பி. நிறுவனத்தின் சொந்த வேக்யூம் பம்ப் தயாரிப்புகளை எல்ஜி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி, அசெம்ப்ளி, சோதனை மற்றும் சந்தைப்படுத்தல் செய்கிறது. காற்றழுத்த தொழில்நுட்பத்துடன் இயல்பான இணைப்பாக நேச்சுரல் அட்ஜசென்சி வேக்யூம் தொழில்நுட்பம் இருப்பதால், எதிர்காலத்துக்குத் தயாரான தொழில்துறைக்கு வேக்யூம் மற்றும் வெற்றிட தீர்வுகளின் வலுவான தொகுப்பை உருவாக்கும் எல்ஜியின் பார்வையை இந்த முயற்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.

மொத்த தர மேலாண்மைக்கான மதிப்புமிக்க டெமிங் விருது பெற்ற நிறுவனமான எல்ஜி, தனது வலுவான தத்துவத்திற்கிணங்க இந்த புதிய வேக்கம் பம்ப் அசெம்ப்ளி லைனை வடிவமைத்துள்ளது. தரம் மற்றும் நம்பகத்தன்மை மீது முழுமையான கட்டுப்பாட்டை வழங்கும் இந்த வசதி, உலகளாவிய போட்டித்திறன் கொண்ட தயாரிப்புகளை இரண்டு ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு எல்ஜி நிறுவனம் வழங்குகிறது.

இதன் தொடக்க விழாவில் எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் அவர்கள் பேசுகையில்,

“எங்கள் வேக்யூம் பம்ப் அசெம்ப்ளி லைன் தொடக்கம், இந்தியாவிலிருந்து உலகளாவிய போட்டித்திறன் கொண்ட தொழில்துறை தீர்வுகளை உருவாக்கும் எல்ஜியின் பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும். வேக்யூம் தொழில்நுட்பம் எங்கள் காற்றழுத்தத் தொழிலின் இயல்பான விரிவாக்கமாகும். டெமிங் அங்கீகாரம் பெற்ற மொத்த தர மேலாண்மை நடைமுறைகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இந்தியாவிலும் எதிர்காலத்தில் உலக சந்தைகளிலும் நம்பகமான வேக்யூம் தீர்வுகளை வழங்க சிறந்த நிலையில் உள்ளோம்” என்றார்.

எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் பேசுகையில்,

“உலகளாவிய வேக்கம் பம்ப் சந்தை, உற்பத்தி, பேக்கேஜிங், மருந்துகள், மின்னணு மற்றும் செயல்முறைத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் தேவையால் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. தரம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய வெற்றிட பம்ப் அசெம்ப்ளி லைன், தானியங்கி சென்சார்-அடிப்படையிலான அசெம்ப்ளி செயல்முறைகள், முழுமையான இறுதி நிலை சோதனைகள் எண்ட்-ஆஃப்-லைன் டெஸ்டிங் மற்றும் 360-டிகிரி சுழலும் எர்கோனாமிக் அசெம்ப்ளி பெஞ்ச்கள் உள்ளிட்ட சிறந்த உற்பத்தி நடைமுறைகளை உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, தொடர்ந்து உயர்தர கட்டமைப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் சிறந்த தயாரிப்பு அமைப்பு உறுதி செய்கிறது.

மேலும், இந்தியாவில் வேக்கம் பம்புகளை அசெம்ப்ளி செய்வதன் மூலம், எங்கள் எல்ஜி நிறுவனம் தனது வாடிக்கையாளர் ஆதரவு சூழலை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்துகிறது. உள்ளூர் அசெம்ப்ளி மற்றும் உதிரிபாகங்களின் விரைவான சேவை, பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த சேவை பொறியாளர்களால் ஆதரிக்கப்படும் நாடு முழுவதும் உள்ள சேவை வலையமைப்பு, மற்றும் உயர்தர ஆப்டர்-மார்க்கெட் ஆதரவு ஆகியவை இணைந்து, பல்வேறு துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக செயல்நேரம் அப்டைம், மற்றும் நீண்டகால நிம்மதியை வழங்குகின்றன.