ஊட்டமலை அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்த ஒகேனக்கல் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தர்மபுரி மாவட்டத்தில் போதையில்லா மாவட்டமாக உருவாக்க போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி மேற்பார்வையில் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தில் செயல்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து ஒகேனக்கல் காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் ஒன்றிணைந்து போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வில் சிறுவயதில் போதைக்கு அடிமையாகக் கூடாது, போதை பொருள் விற்பனை செய்யும் இடம் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், 18 வயதிற்கு கீழ் உள்ளோர் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சமூகத்தில் ஏற்படும் அவப்பெயர் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தொடர்ச்சியாக பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது போஸ்கோ வழக்கு குறித்து விழிப்புணர்வு பெண் பிள்ளைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அருகில் உள்ளவர்கள் மற்றவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் உடனடியாக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் பெண் பிள்ளைகள் தங்கள் மனதளவிலும் உடலளவிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வில் ஒகேனக்கல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சோமு, காவலர்கள் கிருஷ்ணன், பாலாஜி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, உதவி தலைமை ஆசிரியர் அறிவழகன் ,ராமசாமி, ஆசிரியர் கருணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்தையன், பள்ளி மேலாண்மை குழு தலைவி அஞ்சலி, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.