பென்னாகரத்தில் அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல்

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் இராம கொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் சுப்பிரமணி ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது .

அதேபோல் ஒகேனக்கல் ஊட்டமலை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது . இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன் தலைமை தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி ஆசிரியர் கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் பொங்கல் வைத்து இனிப்புகளை பரிமாறி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .