கோவை மாவட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் சார்பாக,தமிழக ஸ்டுடியோ தொழிலை பாதுக்காக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டண விளம்பர பலகையயை வெளியிட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், கோவை மாவட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன், மற்றும் கோவை மாவட்ட போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு
இச்சங்கத்தின் தலைவர் ஆண்டனி ராஜ், செயளாலர் செல்வகுமார், பொருளாளர் வெங்கடேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், புகைப்படக் கருவிகள், அதற்கான மூலப்பொருள்கள், மென்பொருள்கள், செயற்கை நுண்ணறிவு சேவைகள், இணைய வசதி, மற்றும் பிற செயல்பாடு கட்டணங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, இந்த நிலையில் தரமான சேவையை நிலை நிறுத்தவும், உள்ளூர் ஸ்டுடியோக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற நியாயமான, கட்டண மறு ஆய்வு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையை இச்சங்கம் முன்னெடுத்து ள்ளது. தமிழக ஸ்டுடியோ தொழிலை பாதுக்காக்கும் வகையில், புகைப்படத்துறையில், தற்போதைய நிலை மற்றும் நியாயமான கட்டண மறு ஆய்வு தொடர்பான விளம்பர பலகையினை இக்கூடட்த்தின் வாயிலாக வெளியீட பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இச்சங்கத்தின் தலைவர் ஆன்டனி ராஜ் கூறியதாவது..
கடந்த சில ஆண்டுகளில், புகைப்படத் தொழிலுக்கு, தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலை, மற்றும் கருவிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக கேமரா, லென்ஸ், கணினி, ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு, ஆல்பம், பிரிண்டிங், பிரேம், மின்சாரம், இன்டர்நெட் மற்றும் தொழில்முறை மென்பொருள்களின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, எனவே ஸ்டுடியோ தொழிலை பாதுகாக்கும் வகையில், ஒரு சில கட்டண உயர்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் உரிய ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.