மதுரை சொக்கிகுளம் பகுதியில் என்பேன்ஸ் குழந்தைகள் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடைபெற்றது

இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் TN Chamber தலைவர் ஜெகதீசன், PSY கல்வி குழும நிர்வாக இயக்குநர் வரதராஜன், என்பேன்ஸ் மேம்பாட்டு மைய நிறுவனர் சரண்யாசண்முகராஜா, இயக்குநர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மையத்தில் பேச்சு சிகிச்சை தொழில் சிகிச்சை சிறப்பு கல்வி பிசியோதெரபி உளவியல் சேவைகள் நரம்பியல் வளர்ச்சி சிகிச்சை உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை ABA சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சேவைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.