
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பல்வேறு பல் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்கும் வகையில் மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் மூன்று நாட்கள், பல் சிகிச்சை தகவல், மற்றும் கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர், சுந்தர் ராமகிருஷ்ணன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் செளந்தர ராஜ், ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யின் முதல்வர் டாக்டர் தினகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
ஆண்டுதோறும் பல் சார்ந்த தகவல்களையும், பல்சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்தும், பொது மக்களுக்கு ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றதாகவும், மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு, பொதுமக்களிடையே வாய்நலன் குறித்து எடுத்து கூறி, பல் சிகிச்சைகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு, வழங்குவதே நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மூலமாக, பொதுமக்களுக்கு வாய்நல விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பல் சிகிச்சை கண்காட்சி, பல் விழிப்புணர்வு விளையாட்டுப் பகுதி, சரியான பல் துலக்கும் முறைகள் குறித்த நேரடி விளக்கங்கள், மற்றும் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன எனவும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கு பல் சிகிச்சைகள் குறித்த தெளிவான தகவல்களை வழங்கி, அவர்களின் வாய்நலத்தை மேம்படுத்த உதவுகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து எஸ்என்ஆர் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சிவி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
