திருப்பத்தூரில் பாஜக அரசு கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்ட உரிமையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100% ஆதரவாக நான்கு தொகுப்புகளாக மாற்றியதும் மேலும் விவசாயிகள் மற்றும் வேலை எளிய மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பல்வேறு கோரிகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரத்தை நிர்ணயம் செய்திட வேண்டும்

ஒப்பந்த தின கூலி வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும்

பழைய ஓய்வு திட்டத்தை திரும்ப அமுல்படுத்த வேண்டும்

போனஸ் வருங்கால வைப்பு தொகை பணிக்கொடை போன்ற தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

அப்போது திடீரென திருப்பத்தூரில் பேருந்து நிலையம் அருகில் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் பேருந்தை மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ‌ மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்

இதில் 100க்கும் மேற்பட்டோரை‌ கைது செய்தது குறிப்பிடத்தக்கது