மதுரை கே எம் பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார பண்பாட்டு பொங்கல் விழாவில் நடிகர் விமல் பங்கேற்ப்பு

மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கே எம் பார்மஸி கல்லூரியில் விளையாட்டு & கலாச்சார பண்பாட்டு கலைநிழச்சி மற்றும் பொங்கல் விழா 2026
கோலாகலமாக கொண்டாடபட்டது கல்லூரி நிறுவனர் நாகராஜன் அவர்கள், கல்லூரி சேர்மன் கார்த்திகேயராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விமல் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

தொடர்ந்து விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.