
சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், லிட்டில் மீ ப்ளே க்ரூப் மற்றும் நர்சரி பள்ளி கடந்த 4 ஆண்டுகாக இயங்கி வருகிறது. இங்கு ப்ளே க்ருப், ப்ரி கேஜி, ஜுனியர் கேஜி, சீனியர் கேஜி பிரிவுகளில், 50க்கும் மேற்பட்ட சுட்டி குழந்தைகள், தங்களது தொடக்க கல்வியை கற்று வருகின்றனர். குட்டி குழந்தைகளின் சுட்டி தனத்தை வெளிபடுத்தும் வகையில், பள்ளியின் ஆண்டுவிழா குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள, ரோமா பாரடைஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மோனோலிசா தலைமை தாங்கி பள்ளியில், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள், மற்றும் நிகழ்வுகளை எடுத்து கூறி, பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்து, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டீம் எஜுகேஷனல் இன்ஸ்ட்டியூஷன் நிறுவனத்தின் இணை நிருவனர்களான அனா ஸ்டெபி, மற்றும் பெலிக்ஸ் மைக்கேல் ஆகியோர், குத்துவிளக்கேற்றி வைத்து ஆண்டு விழாவை துவக்கி வைத்து, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு திறன் வெளிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், சான்றிதழ்கள், பரிசுகள், மற்றும் மெடல்கள் வழங்கி பெருமை படுத்தினார். தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களுக்காக நடத்த பட்ட உணவு திருவிழா போட்டி, கோல போட்டி, குழந்தைகளுக்கான பேன்ஸி ட்ரெஸ் போட்டி, குழந்தைக்களுக்கான தனித்திறன் போட்டிகள் என அனைத்திலும் கலந்து கொண்ட குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கபட்டது.

தொடர்ந்து நடைபெற்ற சுட்டி குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் குழந்தைகளின் நடனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தோடு, அரங்கத்தை அதிர செய்தது. இதனை குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் என அனைவரும் உற்ச்சாக படுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ச்சியாக நடைபெற்ற சுட்டி குழந்தைகளின் நடனம், அனைவரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியதுடன் அதனை வெளிபடுத்த ஊக்கப்படுத்திய பள்ளி நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
