பெருமாள்பட்டி கிராமத்தில் பொது தேவைக்காக ஒதுக்கப்பட்ட 52 சென்ட் இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலை கட்டியதை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் மனு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா Nபெருமாள்பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், ரேஷன் கடை, பாலர் பள்ளி, விளையாட்டு திடல் பூங்கா உள்ளிட்ட பொது தேவைக்காக 52 சென்ட் ஒதுக்கப்பட்ட நிலையில் அதனை தனிநபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலிகளை கட்டி இடத்தை விற்க முயற்சி செய்வதாகவும் அந்த இடத்தை மீட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

கிராமத்தில் 6.5 ஏக்கர் புஞ்சை நிலம் 1986 ஆம் ஆண்டு ஆதிநகர் என்று பெயரிடப்பட்டு அதில் கிராம மக்களுக்கு தேவையான பூங்கா, கோயில், விளையாட்டு திடல், ரேசன் கடை ஆகிய பொது தேவைகளுக்காக தனித்தனியாக இடம் ஒதுக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் 52 சென்ட் காலியிடத்தை ஆக்கிரமித்து தடுப்பு வேலிகட்டி விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் தங்களை மிரட்டுவதாகவும் எனவே பொது பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட இடத்தை மாவட்ட நிர்வாகம் வரைபடத்தில் உள்ளவாறு நிலத்தை மீட்டு நாவினிப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு மாற்றம் செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.