விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் பாபு சுரேஷ் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். பென்னாகரம் அம்பேத்கார் சிலை அருகில் துவங்கி பிரதான சாலைகளான BDO ஆபீஸ், முள்ளுவாடி, பேருந்து நிலையம் , கடைவீதி,வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் வழியாகச் சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக சென்று பேரணி முடிவுற்றது.
இந்த நிகழ்வில் மொபைல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டக் கூடாது, வேகத்தை குறைப்போம் – விபத்தை தவிர்ப்போம்,டூ வீலர் ஓட்டும்போது தலைகவசம் அணிவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கைகளில் ஏந்தியவாறு, நாடக நிகழ்ச்சி நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மற்றும் இந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து காவலர் சின்னசாமி காவல்துறை அதிகாரிகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், பள்ளியின் தாளாளர் முருகன் மற்றும் பள்ளியின் பொருளாளர் சரவணன், ஆசிரியர்கள்,முதல்வர் மாணிக்கம் , மேனேஜர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.