கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மஸ்ஜீதே நூர் பள்ளிவாசல், நீயூ கிரசண்ட் மழழையர் பள்ளி, தி ஐ பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, கண் புரை சிகிச்சை முகாமில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணடைந்தனர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மஸ்ஜீதே நூர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இப்பள்ளி வாசல் மற்றும், நீயூ கிரசண்ட் மழழையர் பள்ளி, தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, கண் புரை சிகிச்சை முகாமில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணடைந்தனர்.
தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் இங்கு கண் பரிசோதனை முகாம் நடத்த பட்டு வருகின்றது. மேலும், இங்கு பரிசோதனைக்கு வரும் பொதுமக்களுக்கு, கண்களில் புரை இருப்பது கண்டறிய பட்டால், இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமும் நடத்த பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர்
இ.சுக்குருல்லா பாபு,
செயலாளர் தாஜ்முகம்மது, அறங்காவலர்
ஜீ.டி, ஜபார் அலி, மற்றும் நிர்வாகிகள் மொகரூர் பாஷா, அப்துல்லா, ஏ.கே.லால்பாட்சா,மூபீர், ஜே.எம்.பாஷா, மக்கள் நல்லுறவு சதிஷ்குமார், ஆனந்த், பிரகாஷ், சித்திக், லோகேஷ், மூனாவர், மற்றும் 33 ம் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணண், ஐ பவுன்டேசன் மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். காலை 9 மணியளவில் துவங்கிய இந்த கண் பரிசோதனை முகாம், மதியம் 2.மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.