கோவை கொடிசியா, பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா, ரஷ் ரிப்பப்லிக் சார்பில் சாண்டா’ஸ் சோசியல் கொண்டாட்டம் துவங்கபட்டுள்ளது

கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.
இதன் துவக்க விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் குடும்பமாகவும், நண்பர்களாகவும் வந்து ஷாப்பிங் செய்ய ஏராளமான பொருட்கள் உள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதும் கிறிஸ்துமஸ் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பும் கிறிஸ்துமஸ் தாத்தா, கேக் வகைகள், வண்ண விளக்கு அலங்காரங்கள் என பல உள்ளன.
துவக்க நாளான இன்று பிரபல ராக்ஸ் பள்ளிக்கூடம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை பாடி அசத்தினர். அவர்களை தொடர்ந்து பல இசை குழுவினரும் பாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். மேலும் ‘நாய்களுக்கான போட்டிகள்’ நடைபெற்றது. அது அங்கு கூடிய மக்களை வெகுவாக கவர்ந்தது. 50க்கும் மேற்பட்ட நாய்கள் தங்கள் உரிமையாளர்கள் கட்டளையை ஏற்று கட்டுப்பாடுடன் நடந்து, அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இறுதியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவையில் நடைபெறும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான இந்த நிகழ்ச்சி பற்றி ரஷ் ரிப்பப்லிக் நிறுவனத்தின் இணை-நிறுவனர் லக்ஷ்மிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
இது “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு. இதை கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் கோவை மக்களுக்காக வழங்குகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சூர், கொச்சின், பெங்களூரு என தென்னிந்தியாவின் பல இடங்களில் இருந்து 100 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இவை நவீன உடை, ஜவுளி, அலங்கார பொருட்கள், தயாரிப்புகள், உணவு மற்றும் சிற்றுண்டி நிறுவனங்கள், விளையாட்டு என பல பிரிவுகளில் இயங்கும் பிராண்டுகள். இரண்டு நாட்கள் நடைபெறும் 5 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். 5 வயது முதல் பெரியவர்கள் அனைவர்க்கும் நுழைவு கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.