திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக
பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
அரசு பணியாளர்களுக்கு தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும்,
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சுரேஷ், மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோபிநாதன் சபரிநாதன் முத்துக்குமார் கார்த்திகா, ஷியாம், லோகையா, சேகர், ஆறுமுகம், துரைசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
