செங்கோட்டை அரசு மருத்துவமனையையும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவை பாராட்டிய சுகாதாரத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கேட்டறிந்தார் ஆய்வின்போது தென்காசி எம்பி ராணிஸ்ரீ குமார் சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜா மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்டாக்டர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதற்காக செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அமைச்சர் மா சுப்ரமணியன் பாராட்டினார்.மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு சோப்பு பற்பசை டிரஸ் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய மஞ்சள் பை வழங்கும் திட்டத்தையும் பாராட்டினார்.மேலும் மருத்துவமனையில் உள்ள நூலகத்திற்கு தன் சொந்த செலவில் 500 புத்தகங்கள் வழங்குவதாக உறுதி அளித்தார்.