
ஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனரான இவர், 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டு மொழி பயிற்றுநராக உள்ளார். இவர் ஏற்கனவே மை இங்கிலீஷ் க்ராமர், தி அன் டோல்டு சீக்ரெட் ஆப் சக்ஸஸ், உள்ளிட்ட 3 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இதனிடையே, கிருபாஷினியின் நான்காவது புத்தகமான மை ப்ரெஞ்ச் கிராமர் எனும் புத்தக வெளியீட்டு விழா கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் மதிவாணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட, கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார்இதனைத் தொடர்ந்து கிருபாஷினி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“நான் இதுவரை மொழி தொடர்பாகவும், ஊக்கமளிக்கும் புத்தகங்களையும் எழுதியுள்ளேன்.
ஐரோப்பிய, ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே எனது எதிர்கால லட்சியம். மேலும், எங்களது பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளை பொதுமக்களுக்கு நாங்கள் பயிற்றுவித்து வருகிறோம். ஒருவர் இரண்டு மொழிகளுக்கு மேல் கற்கும்போது அவரது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இதனை நாம் அன்றாட வாழ்விலும் பார்க்க முடியும்.
எனவே, எந்த வயதினராக இருந்தாலும் பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம்,” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
