
மத்திய மற்றும் மாநில கூட்டமைப்பின் கீழ் கோவை மாநகரில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மைய உற்பத்தியாளர்களின், மூலபொருட்களை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்து, அவர்களையும், தொழில் முனைவோர்களாக மாற்ற என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற்றது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசின் குறு, சிறு, மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். கோவை
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, சிஐஏ அமைப்பின் தலைவர் தேவக்குமார், எப்.ஐ.இ.ஓ அமைப்பின் துணை இயக்குநர் சுவாமி நாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்தரங்கில் தொழில் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்பொழுது..
சிறு
குறு தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி திறனை எவ்வாறு ஏற்றுமதி செய்யலாம், அதனை முறையாக பதிவு செய்வது எவ்வாறு? நாம் வழங்கும் உதிரிபாகங்களுக்கான பணத்தை பெறுவது எப்படி? இதற்கான உரிமங்கள், அரசின் சான்றிதழ்கள் பெறுவது எப்படி? என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்க பட்டது. சிறு, குறு, தொழில், உரிமையாளர்களும், ஏற்றுமதியாளர்கள் ஆனால் மட்டுமே கோவை மாநகரின் வளர்ச்சி பெருகும் என தெரிவிக்கபட்டது. இக்கருத்தரங்கின் மூலமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை, வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் தொழில் முனைவோர்கள் எழுப்பினர். அதற்கான விளக்கத்தையும் மாவட்ட தொழில் மையத்தினர் அளித்ததுடன், கோவையில், எம்எஸ்எம்இ நெக்ஸ் ஜென்ட்ரேஷன் சிறப்பாக வளர்ச்சி பெற சிஏஏ அமைப்பின் சார்பாக, பல்வேறு திடட்ங்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
