
கோவை சித்ரா பகுதியில் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனை சார்பாக பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கு கண்கள் பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இலவச சிகிச்சைகள், பரிசோதனைகளும் நடத்த பட்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற ஸ்பான்சர்களின் சேவைகளை பாராட்டும் வகையில் இம்மருத்துவமனைசார்பாக, மருத்துமனை வளாகத்தில் விழா நடத்தி அனைவரையும் பாராட்டினர். இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நரேந்திரன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கண்புறை ஏற்படுவதால் உருவாகும் பாதிப்புகள் குறித்து கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவர் பாலசரஸ்வதி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நீரிழிவு விழித்திரை தொடர்பாக ரெடினா மருத்துவ ஆலோசகர் டாக்டர் சரவணன் சிறப்புரையாற்றினார். கண்களில் ஏற்படும் காயங்கள் குறித்தும் அதற்க்கு உண்டான தீர்வுகள் குறித்தும், டாக்டர் விஜி ரங்கராஜன் சிறப்புரையாற்றினார். இதே போல கண் வங்கி குறித்தம் அதன் செயல்பாடுகள் குறித்தும் கார்னியா தலைவர் மருத்துவர் மங்களா, மயோபியா தொற்று நோய் குறித்து குழந்தைகள் கண் மருத்துவர் சசிகலா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனை கடந்து வந்த பாதைகள் குறித்தும், அதற்க்கு உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்கள் அனைருக்கும் விழா மேடையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான புஷ்பானந்தம் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது..
அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இதுவரை 19 முகாம் களை வெற்றி கரமாக நடத்தி அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சைகள் அளிக்கக் பட்டு தற்பொழுது வரை நீண்ட ஆயுளுடன், கண்பார்வை குறைபாடுகள் இல்லாமல் இருந்து வருகின்றனர். அதற்க்கு உறுதுணையாகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அறுவை சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள், வழங்கும் மருத்துவமனையின் செயல் பாராட்டுக்குறியது அதற்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்
வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் ஜான், பால் ராஜ், அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி முத்து சாமி, மருத்துவர்கள் கணேஷ் ராமசந்திரன், ரோட்னி ஜே மோரிஸ், சந்திரசேகர், மற்றும் விஜயராணி, வனிதா, தேவி, திவ்யா என பலரும் கலந்து கொண்டனர்.
