
கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் கியா பிராண்ட் கார்கள் விற்பனைக்கென பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள குன் கியா ஷோரூம், நவீன வசதிகளுடன் கூடிய உள் கட்டமைப்புடன்,வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று தனது முதலாம் ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடியது..
இந்நிலையில் குன் கியா ஷோரூமில் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் கார் அறிமுக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
குன் கியா வர்த்தக மேலாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கியா இந்தியா ஏரியா சேல்ஸ் மேனேஜர் பரத்,குன் கியா நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் உதய் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர்’ ரங்கநாதன்,பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் விக்னேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆல் நியூ செல்டோஸ் காரை அறிமுகம் செய்து வைத்தனர்..
இதில்,குன் கியா வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
அதிகமான வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் எஸ்.யூ.வி.யான புதிய கியா செல்டோஸ் குறித்து குன் கியா வர்த்தக மேலாளர் ராமநாதன் கூறுகையில், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பிரீமியம் வகை காராக அறிமுகம் ஆகி உள்ள ஆல்-நியூ கியா செல்டோஸ். சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளும் இதில் இருப்பதாகவும், புதிய கியா செல்டோஸ் மேம்பட்ட அடாஸ் தொழில்நுட்பம், பிரீமியம் உட்புற வடிவமைப்பு மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றுடன், பனோரமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்..
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குன் கியா ஷோரூமில் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,கார் பிரியர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஆல் நியூ கியா செல்டோஸ் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்..
