கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இக்கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்விழா நிகழ்வில் கல்லூரி முதல்வர். டாக்டர் டி கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசியதுடன் கல்லூரி வளர்ச்சி, முதலீடுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு சாதனைகள் ஆகியன விரிவாக ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு டாக்டர் R சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருத்தினராக கோவை சைட் பிளானிங் ஆல்ஷ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் தலைவர் டி கவுசிக் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது “தற்போதைய தொழில்புரட்சி யுகத்தில் நிறுவனங்கள் செயல்திறனை முதன்மையாக கொண்டு செயல்படுகிறது. இச்சூழலில் மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்களை சூழலுக்கு ஏற்றவாறு தயார்படுத்தி கொள்வதுடன் மிக துல்லியமாக தங்கள் தொழிநுட்ப அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.”

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் கல்லூரியின் சிறந்த மாணவராக சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர் எஸ் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வி ராஜய லட்சுமி நினைவு பரிசு ரூபாய் நான்காயிரம் பரிசுத்தொகையுடன், கேடயம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்றவர்களில் இயந்திரவியல் துறையில் கே.பிரவீன், ஆட்டோமொபைல் துறையில் எஸ் ஜி ரிஷாத், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் ஆர் ஹாரூன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் எம் எஸ் யஸ்வந்த், கணிப்பொறி துறையில் எஸ் விஷால் மற்றும் கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வொர்க்கிங் துறையில் பி ஜெயக்கண்ணன் ஆகியோருக்கு பரிசுத்தொகை ரூபாய் இரண்டாயிரம், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கபட்டனர்.

மேலும், கல்லூரியின் சார்பாக இக்கல்வியாண்டில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறந்த விளையாட்டு மாணவராக கே சிரஞ்ஜன் இயந்திரவியல் துறை மாணவரும், சிறந்த விளையாட்டு மாணவியாக கணிப்பொறி துறை மாணவி என் ஹர்ஷிதாவும் தேர்தெடுக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் இறுதியாக கம்யூனிகேஷன் அண்ட் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறைத் தலைவர் எஸ் கார்த்திக் நன்றி கூறினார்.